» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அவசர அழைப்பு: ஐபிஎல் தொடரிலிருந்து ரபடா விலகல்

வெள்ளி 3, மே 2019 3:47:45 PM (IST)

டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான  ரபடா, காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

டெல்லி கேபிடல்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் ககிசோ ரபடா. 12 ஆட்டங்களில் அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

இந்நிலையில் முதுகு வலிப் பிரச்னை காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார் ரபடா. காயம் காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக நாடு திரும்புமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ரபடாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் பிளேஆஃப் ஆட்டங்களிலும் ரபடாவால் பங்கேற்கமுடியாது. 

இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டியை விட்டு விலகுவது கஷ்டமாக உள்ளது. ஆனால் உலகக் கோப்பை தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை அவசியமாகிறது. எங்களுடைய டெல்லி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் என்று இந்த விவகாரம் குறித்து தன் நிலையை வெளிப்படுத்தியுள்ளார் ரபடா. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory