» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்தபோது அஃப்ரிடியின் வயது 16 அல்ல: உண்மை வெளிவந்தது

வெள்ளி 3, மே 2019 3:58:21 PM (IST)

37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தபோது அஃப்ரிடியின் வயது 16 அல்ல என்ற  உண்மை தற்போது வெளிவந்துள்ளது.

1996-ல், 37 பந்துகளில் சதமடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் பாகிஸ்தான் சாஹித் அஃப்ரிடி. அதைவிடவும் அவருக்கு 16 வயதுதான் என்பது மேலும் வாயைப் பிளக்கவைத்தது. எனினும் அஃப்ரிடியின் வயது குறித்துப் பலரும் சந்தேகங்களைத் தொடர்ந்து எழுப்பி வந்தார்கள். ஆனால் அப்போது தெரிவிக்கப்பட்ட தகவலில் உண்மையில்லை என தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்படுத்தியுள்ளார் அஃப்ரிடி. கேம்சேஞ்சர் என்கிற நூல் இந்த வாரம் இந்தியா, பாகிஸ்தானில் வெளியாகியுள்ளது. 

அந்த நூலில், 1975-ன் நான் பிறந்தேன். 1996 அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தேர்வாகினேன். நிர்வாகிகள் சொன்னது போல எனக்கு 16 வயது அல்ல, 19 வயது. என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார். இதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. 2016 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அஃப்ரிடி. அப்போது 36 வயதில் அவர் ஓய்வு பெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் 40 அல்லது 41 வயதிலேயே ஓய்வு பெற்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory