» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகள் நாளை தொடக்கம்: சென்னை - மும்பை மோதல்!

திங்கள் 6, மே 2019 5:54:28 PM (IST)ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்கவுள்ளன. ஆரம்பம் முதலே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்திருந்த சென்னை அணியை பின்னுக்குத் தள்ளி மும்பை அணி கடைசி நேரத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று நான்கு மணிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான் ஆட்டத்தில் சென்னை அணி பெற்ற தோல்வியும், 8 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பெற்ற வெற்றியும் இந்த மாற்றத்திற்கு காரணமாகியது. பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் டு ப்ளஸிஸும் சுரேஷ் ரெய்னாவும் வலுவான கூட்டணி அமைத்து ரன் ரேட்டை உயர்த்தினர். அவர்களைத் தவிர தோனி உள்ளிட்ட எந்த வீரரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸிஸ் 96 ரன்கள் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ரெய்னா 53 ரன்கள் சேர்த்தார். கௌரவமான ஸ்கோர் என்றாலும் பஞ்சாப் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களிலேயே அந்த அணி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 71 ரன்கள் எடுத்தார். 

கொல்கத்தா ஏமாற்றம்.. முதலிடத்தில் மும்பை!!

இரவு 8 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கொல்கத்தா அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறியதோடு விரைவாக தங்களது விக்கெட்டுகளையும் பறிகொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

அதிகபட்சமாக அந்த அணியில் கிறிஸ் லின் 41 ரன்களும் உத்தப்பா 40 ரன்களும் சேர்த்தனர். அதிரடி வீரர் ரஸ்ஸல் எதிர்கொண்ட முதல்பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். குறைவான இலக்கு என்பதால் மும்பை அணி 16.1 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் அடித்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 55 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். மும்பையும் சென்னையும் ஒரே புள்ளிகளைப் பெற்றிருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் மும்பை முதலிடத்தைப் பெற்றது.

ப்ளே ஆஃப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி ஹைதராபாத், டெல்லி அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் நாளையப் போட்டியில் தோல்வியடையும் அணி மீண்டும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory