» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 2019 : சென்னையை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது மும்பை

புதன் 8, மே 2019 11:08:32 AM (IST)சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் 2019 சீசன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மும்பை.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டமான குவாலிபையர்-1 சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மும்பை -சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டூ பிளெஸ்ஸிஸ்-வாட்ஸன் துவக்க ஜோடியாக களமிறங்கினர். டூபிளெஸ்ஸிஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் சஹார் பந்துவீச்சில் வெளியேறினார். வாட்ஸனை 10 ரன்களோடு அவுட்டாக்கினார் க்ருணால் பாண்டி. நிலைத்து ஆடி ரன்களை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 5 ரன்களுக்கு ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது சென்னை.

அதன் பின் முரளி விஜய்-அம்பதி ராயுடு இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 10-ஆவது ஓவர் நிறைவில் தான் ஸ்கோர் 50-ஐ கடந்தது. 3 பவுண்டரியுடன் 26 ரன்களை எடுத்த முரளிவிஜய், ராகுல் சஹார் பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அதன் பின் கேப்டன் தோனி-ராயுடு இணை ரன்களை சேர்த்தது. லசித் மலிங்காவின் ஓவரில் அடுத்தடுத்து 2 பிரம்மாண்டமான சிக்ஸர்களை விளாசினார் தோனி. ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் இஷான்கிஷானிடம் கேட்ச் கொடுத்தார் தோனி. அது அவுட் என கருதப்பட்ட நிலையில்,  பும்ரா வீசியது நோபால் என நடுவர் அறிவித்ததால் தப்பினார் தோனி.

20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் ராகுல் சஹார் 2-14, ஜெயந்த் யாதவ் 1-25, க்ருணால் பாண்டியா 1-21 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தரப்பில் டி காக்-ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆனால் ரோஹித் 4, டி காக் 8 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். அதன் பின் சூரியகுமார் யாதவ்-இஷான் கிஷன் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கொண்ட சென்னையின் பலமான சுழற்பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் தனது 7-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர் விக்கெட் சரிவு: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த இஷான் கிஷானை 28 ரன்களுக்கு போல்டாக்கினார் தாஹிர். அவரைத் தொடர்ந்து க்ருணால் பாண்டியாவும் தாஹிர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டானார். 

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் சூரியகுமார் யாதவ் ஸ்லிப்பில் அடித்த கேட்சை தவறவிட்டார் வாட்ஸன். 10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர். 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. சென்னை தரப்பில் தாஹிர் 2-33, தீபக் சஹார் 1-30, ஹர்பஜன் சிங் 1-25 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.தொடர் 4-ஆவது வெற்றி: சென்னைக்கு எதிராக மும்பை அணி பெறும் தொடர் 4-ஆவது வெற்றி இதுவாகும்.  இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாதில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்திற்கு மும்பை அணி தகுதி பெற்றது.  இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில்  டெல்லி-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory