» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிஷப் பந்த் அதிரடியில் டெல்லி த்ரில் வெற்றி: ஹைதராபாத்தை வெளியேற்றியது

வியாழன் 9, மே 2019 10:47:57 AM (IST)பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் காரணமாக பரபரப்பான கடைசி ஓவரில் ஹைதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று த்ரில் வெற்றி பெற்றது டெல்லி. 

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் ஒரு பகுதியாக டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் (வெளியேறும் சுற்று) விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது ஹைதராபாத். 163 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி தரப்பில் களமிறங்கிய ஷிகர் தவன்-பிருத்வி ஷா ஆகியோர் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 56 ரன்களை விளாசிய பிருத்வி ஷா, கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரிஷப் பந்தின் வான வேடிக்கை தொடர்ந்தது. பசில் தம்பி வீசிய 18-வது ஓவரில் 21 ரன்களை விளாசினார்.  வெற்றிக்கு மிக அருகில் அழைத்து வந்த ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 49 ரன்களை எடுத்து புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது டெல்லி. வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிபையர்-2 ஆட்டத்தில் டெல்லி - சென்னை அணிகள் மோதுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory