» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றும்: ஆஸி. முன்னாள் பௌலர் மெக்ராத் கணிப்பு

செவ்வாய் 28, மே 2019 3:36:43 PM (IST)

உலகக் கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்து அணிக்கு வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் கிளென் மெக்ராத் கணித்துள்ளார். 

வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து மெக்ராத் கூறியதாவது: இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிக்கான சிறந்த குழுவை கொண்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புள்ள அணியாகவே இங்கிலாந்து களமிறங்குகிறது. அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.

தற்போதைய பார்மின் அடிப்படையிலேயே நாம் செல்ல முடியும். அந்த வகையில் இங்கிலாந்து அணி பயணிக்கும் வழி என்னை கவர்ந்துள்ளது. அவர்கள், பெரிய அளவிலான ஸ்கோரையும் குவிக்கின்றனர். பெரும்பாலான அணிகள் முதல் 15 ஓவர்களையும், கடைசி 15 ஓவர்களையும் அதிரடியாக கையாளும். நடுஓவர்களில் திடமாக செயல்படும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் 50 ஓவர்களையும் அதிரடியாக கொண்டு செல்லும்.

சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது கடினமானதாக இருக்கும். அதேவேளையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கடும் போட்டியாளர்களாக இருப்பார்கள். மேலும் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் கவனிக்க தக்கதாக உள்ளன. தென் ஆப்பிரிக்கா எப்போதுமே சிறந்த அணி. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது எதிர்பாராத நேரத்தில் வெற்றி அல்லது தோல்வியை சந்திக்கக்கூடியது. அதே ஒற்றுமையை கொண்டதுதான் பாகிஸ்தான் அணி. இதனால் இம்முறை உலகக் கோப்பை தொடர் சுவாரஸ்யமாக இருக்கும்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது கடினமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரில் எப்படி பயணிக்கப் போகிறது என்பதை நினைத்து சிறிது கவலை கொண்டிருந்தேன். ஆனால் தாமதமாக அவர்கள் அடைந்துள்ள பார்ம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. தங்களுக்கு சாதகம் இல்லாத சூழ்நிலைகளில் (இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்) அபாரமாக செயல்பட்டுள்ளனர். இதனால் உலகக் கோப்பை தொடரில் தங்களுக்கான வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி அதிகரித்துக் கொண்டுள்ளது. இறுதிப் போட்டிக்கு அவர்கள் முன்னேறமாட்டர்கள் என்று நினைக்க தோன்றவில்லை. இவ்வாறு மெக்ராத் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory