» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து

வியாழன் 30, மே 2019 10:24:03 PM (IST)உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜாசன் ராய் மற்றும் ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர். 

பின்னர் 2 பந்துகள் இடைவெளியில், ஜாசன் ராய் 54 ரன்னிலும், ஜோ ரூட் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் ஜோடி சேர்ந்த மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் தனது அரைசதத்தினை பதிவு செய்த மோர்கன் 57 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அதனைதொடர்ந்து ஜோஸ் பட்லர் 18 ரன், மொயீன் அலி 3 ரன், கிறிஸ் வோக்ஸ் 13 ரன் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் நிலைத்துநின்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியில் நிகிடி 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் மற்றும் ரபடா 2 விக்கெட்டுகளும், பெலக்வாயோ 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory