» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெரிய அணிகளை வங்கதேசம் வீழ்த்தும்: ஷகிப் அல் ஹசன் நம்பிக்கை

திங்கள் 3, ஜூன் 2019 5:50:45 PM (IST)பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என வங்கதேச முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார். 

மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன் 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய வங்கதேச அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 330 ரன்கள் குவித்தது. இதுவே வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் 75 ரன்கள் குவித்த வங்கதேச அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கூறியதாவது: இந்த உலகக் கோப்பைத் தொடரில் நாங்கள் சந்திக்கவுள்ள அனைத்து சவால்களுக்கும் கடந்த காலத்தில் எங்களை தயார்படுத்திக்கொண்டோம். 

குறிப்பாக மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உடனான முத்தரப்பு தொடர் எங்களை தயார்படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது. அதுவே எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இது வெறும் தொடக்கம் தான் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இன்னும் நிறைய சவால்கள் எங்களுக்கு காத்திருக்கின்றன.  கடந்த 12 ஆண்டுகளில் வங்கதேச கிரிக்கெட் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுதான் எங்கள் ரசிகர்களுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரணிகளுடனான எங்கள் தோல்விகளை ரசிகர்கள் ஏற்பதில்லை. இதனால் எங்களுடைய ஆட்டமும் மேம்பட்டுள்ளது. இது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory