» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஜெர்மனியின் நட்சத்திர கால்பந்து வீரர் ஆதரவு

செவ்வாய் 4, ஜூன் 2019 4:01:19 PM (IST)

ஜெர்மன் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லேர் டுவிட்டர் பதிவின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி நாளை சவுடாம்தனில் நடக்க உள்ள போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முதல் ஆட்டத்தை காண இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் தாமஸ் முல்லேர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணி மற்றும் விராட் கோலிக்கு சிறப்புச் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, தாமஸ் இந்திய அணியின் உடை அணிந்து கையில் பேட்டுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் ஜெர்மனி சியர்ஸ் ஃபார் இந்தியா எனும் ஹேஷ்டாக்கினை போட்டு குறிப்பிட்டிருப்பதாவது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி திரிலாக விளையாடப்போகும் அனைத்து அணிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது ஆதரவு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கே. மேலும் கோலி, ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பின் ரசிகராவார். முந்தைய ஆட்டங்களில் ஜெர்மனி கால்பந்து அணிக்கு அவரது ஆதரவை முழுவதுமாக வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory