» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இன்டீஸை போராடி வென்றது ஆஸ்திரேலியா: ஹைலைட்ஸ் விடியோ!

வெள்ளி 7, ஜூன் 2019 11:17:22 AM (IST)மேற்கிந்தியத் தீவுகள் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 49 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. ஆஸி அணியின் டாப் ஆர்டர் நிலைகுலைந்த நிலையில், ஆல்ரவுண்டரான நாதன் நைல் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 92 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் அதிகரிக்க உதவினார்.

உலகக் கோப்பை வரலாற்றில் 8-ம் நிலை பேட்ஸ்மேனாக ஆடி அதிகபட்ச ஸ்கோர் (92) அடித்த சாதனையை நிகழ்த்தினார் நாதன் கோல்டர் நைல். முன்னாள் கேப்டனான ஸ்மித் நிதானமாக ஆடி 73 ரன்களுடன் அரை சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேயாவின் அற்புதமான பந்துவீச்சில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது மே.இ. அணி. ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் அற்புதமாகப் பந்துவீசி 46 ரன்களை மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory