» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் கிளவுஸில் ராணுவ முத்திரையை அகற்ற வேண்டும் : பிசிசிஐக்கு ஐசிசி உத்தரவு!!

வெள்ளி 7, ஜூன் 2019 12:47:40 PM (IST)தோனியின் கிளவுஸில் உள்ள இந்திய ராணுவ முத்திரையை அகற்ற வேண்டும் என பிசிசிஐக்கு ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உலக கோப்பை கிரிக்கெட்டின் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் தோனியின் கிளவுஸ் தொடர்பாகப் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, இந்தியத் துணை ராணுவ சிறப்புப் படையின் பாலிதான் என்கிற முத்திரையைக் கொண்ட கிளவுஸை அணிந்திருந்தார். தியாகம் என்கிற அர்த்தம் கொண்ட முத்திரை அது. 2011-ல் தோனிக்கு ராணுவத்தில் கெளரவ லெப்டினெண்ட் பதவி வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, நாட்டுப்பற்றுடன் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸை தோனி அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், இது ஐசிசி விதிமுறையை மீறியுள்ளதாக பிசிசிஐயிடம் ஐசிசி புகார் அளித்துள்ளது.  இதையடுத்து தோனியின் கிளவுஸில் உள்ள ராணுவ முத்திரையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கட்டளையிட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்களின் ஆடைகள், கிரிக்கெட் உபகரணங்களில் மதம், அரசியல் போன்றவற்றின் பிரசாரம் இருக்கக்கூடாது. அதனால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தோனி முதல்முறையாக இந்த விதிமுறையை மீறியுள்ளதால் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory