» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த இங்கிலாந்து இமாலய வெற்றி : ஹைலைட்ஸ் விடியோ!

புதன் 19, ஜூன் 2019 11:18:06 AM (IST)ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 397/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கன் 247/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த மார்கன் 17 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 71 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஓர் ஆட்டத்தில் 17 சிக்ஸர் அடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார் இயன் மார்கன். அதேபோல இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் 25 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதுவும் உலக சாதனைதான். ஆப்கன் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory