» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல: இலங்கை வீரர் டி சில்வா சவால்

செவ்வாய் 2, ஜூலை 2019 12:14:39 PM (IST)



இந்திய அணி வீழ்த்த முடியாத அணி அல்ல. உலகக்கோப்பையில் வீழ்த்துவோம் என்று இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா டி சி்ல்வா தெரிவித்துள்ளார்.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 23 ரன்களில் வென்று, நம்பிக்கையுடன் இலங்கை அணி இருக்கிறது. இந்த சூழலில் வரும் சனிக்கிழமை ஹெடிங்லியில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. வெற்றிக்குப்பின், இலங்கை வீரர் தனஞ்செயா டி சில்வா கூறுகையில், "இந்திய அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி அல்ல. கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை வென்றிருக்கிறோம். 

ஐசிசி போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம். மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி அதிகமான நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெல்வோம். இந்திய அணியை எங்களால் வெல்ல முடியும். ஒவ்வொரு போட்டியையும் வெல்வதற்காகவே முயற்சித்து வருகிறோம், இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தால், உலகக்கோப்பைத் தொடரில் 5-வது இடத்துக்கு உயர்வோம் " எனத் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. இதேபோன்ற முடிவை இந்த முறையும் இலங்கை அணி எதிர்பார்த்து காத்திருப்பதாக அந்த அணி வீரர் டிசில்வா பேட்டி அளித்துள்ளார்.  

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான்  அணிகளை மட்டும்  இலங்கை வீழ்த்தியுள்ளது. தற்போது 8 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் இலங்கை அணி 6-வது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணியால் இந்திய அணியை வென்றால்கூட உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory