» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி அபார சதம் : 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது!!

வியாழன் 15, ஆகஸ்ட் 2019 11:38:25 AM (IST)மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான  3 வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலியின் அபார சதம் மூலம் இந்தியஅணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம், பின்னர் மழை நின்றதும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது. மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.  10-ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழபின் 114 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.

5 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசிய கெயிலை அவுட்டாக்கினார் கலீல் அகமது. 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்களை விளாசிய எவின் லெவிஸ், சஹல் பந்தில் தவனிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 25 ரன்கள் எடுத்திருந்த ஷிம்ரனை போல்டாக்கினார் ஷமி. அவருக்கு பின் ஜடேஜா பந்தில் 24 ரன்களுடன் ஷாய் ஹோப்பும் போல்டானார். 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்து பூரணும், கேப்டன் ஹோல்டர் 14, பிராத்வெயிட் 16 ரன்களுடனும் வெளியேறினர்.  அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களுடன் இருந்தது மே.இ.தீவுகள்.பேபியன் ஆலன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.

35 ஓவர்களில் 255 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அணியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ரோஹித் சர்மா 10, ஷிகர்தவண்36, விராட் கோலி 114, ஷ்ரேயஸ் ஐயர்65,  கேதார் ஜாதவ் 19 என ரன்களை எடுக்க 32.3 ஓவரில் 256 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்திய-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது  ஒருநாள் ஆட்டத்தி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory