» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிஎன்பிஎல்: கோப்பையை வென்ற சூப்பர் கில்லீஸ்!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 11:46:58 AM (IST)தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோப்பையை கைப்பற்றியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கோபிநாத் ரன்ஏதும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் கௌசிக் காந்தி 22 ரன்களும், சுஷில் 21 ரன்களும் அடித்தனர். சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 126 ரன் எடுத்தது. 

127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் இறங்கினர். நிஷாந்த் 4 ரன்னிலும், ஜெகதீசன் , சதுர்வேத் ரன் எதுவும் எடுக்காமலும் வந்த வேகத்தில் வெளியேறினர். பின்னர் வந்த சுமந்த் ஜெயினும், மோகன் அபினவும் அணியை சரிவில் இருந்து மீட்னர். இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்தனர். சுமந்த் ஜெயின் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 2019ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் கோப்பையை கையிலேந்தியது. 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்த ஜி.பெரியசாமி ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory