» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்

சனி 17, ஆகஸ்ட் 2019 10:15:45 AM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியை கபில்தேவ் தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. 

2007-ல் வங்கதேச தொடரின் போது கிரிக்கெட் மேனேஜராக இந்திய அணியுடன் இணைந்த ரவி சாஸ்திரி பிறகு அணி இயக்குநராக 2014-16 காலக்கட்ட்த்தில் விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றினார் பிறகு தலைமைப் பயிற்சியாளராக 2017-2019 வரை பணியாற்றி வந்த நிலையில் அணி இவரது பயிற்சியின் கீழும் கோலியின் கேப்டன்சியின் கீழும் பல வெற்றிகளை மூன்று வடிவங்களிலும் குவித்து வருவதால் இதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று மீண்டும் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கபில்தேவ், கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகிய சிஏசி உறுப்பினர்கள் ரவி சாஸ்திரியை மீண்டும் நியமிக்க ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், நியூசிலாந்தின் மைக் ஹெசன், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர், பில் சிம்மன்ஸ் போட்டியிலிருந்து விலகியதையடுத்து இவர்களை பின்னுக்குத் தள்ளி ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

"நம்பர் 3 டாம் மூடி, நம்பர் 2 மைக் ஹெசன், நம்பர் 1 ரவிசாஸ்திரி, நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்படுகிறார், ஆனால் இது மிகவும் நெருக்கமான போட்டி” என்றார் கபில்தேவ்.நேர்காணல் கண்ட அனைத்து பயிற்சியாளர்களை விடவும் சாஸ்திரியின் சாதனை ஒப்பிடப்பட முடியாதது என்று கருதியது சிஏசி. இந்திய அணி நம்பர் 1 இடத்தை டெஸ்ட்டில் பிடித்தது, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 71 ஆண்டு வரலாற்றில் இந்திய அணி கோலி தலைமையில் தொடரை வென்றது. இந்தியா மட்டுமல்ல ஆசியாவுக்கே இது சாதனையாக அமைந்தது.

ஆனால் 2015, 2019 உலகக்கோப்பைகளில் அரையிறுதி வரை வந்து இந்தியா தோல்வியடைந்ததும் சாஸ்திரி பயிற்சியின் கீழ்தான், ஆனால் இது சிஏசி முடிவைப் பாதிக்கவில்லை. மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 13-ல் வென்றது, 60 ஒருநாள் போட்டிகளில் 43-ல் வெற்றி 36 டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி 25 போட்டிகளில் வென்றுள்ளது, இது உண்மையில் ஒரு பெரிய ரெக்கார்ட்தான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.ஆனால் வேறு சிலர் கிரிக்கெட் வல்லுநர்களோ கேப்டனின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யக் கூடாது என்ற ஒரு மனநிலை பிசிசிஐ டாப் நிர்வாகத்தினரிடையே வந்த பிறகு, ஏற்கெனவே ரவிசாஸ்திரிதான் என்று முடிவெடுத்து விட்டு பட்டியலில் கடைசி 3 பேர் என்றெல்லாம் ஏன் கூறி அவர்களை நேர்காணல் என்று அவர்களின் நேரங்களையும் விரயம் செய்ய வேண்டும் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory