» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் நீக்கம்: கவாஸ்கர் அதிர்ச்சி

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:19:02 PM (IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறாதது  அதிர்ச்சியளிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே சமீபகாலமாக இடம்பெற்று வரும் அஸ்வினுக்கு இன்னொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆண்டிகுவா-வில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் கோலி, சாஸ்திரிக்கு எதிராக ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

கிரிக்கெட்டில் ஒளிபரப்பில் வர்ணனையாளராகப் பணியாற்றிய கவாஸ்கரும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் கூறியதாவது: அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவைத் தேர்வு செய்தது ஆச்சர்யப்பட வைக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதித்த வீரருக்கு அணியில் இடமில்லை என்பது திகைப்படைய வைக்கிறது என்று கூறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 11 டெஸ்டுகளில் 552 ரன்களும் 60 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் அஸ்வின். அதில் நான்கு சதங்களும் 5 விக்கெட்டுகளை 4 தடவையும் எடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory