» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:36:15 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

கடந்த உலகக் கோப்பையுடன் ரவிசாஸ்திரி மற்றும் சக பயிற்சியாளர்கள் பணிக்காலம் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமித்து கபில்தேவ் தலைமையிலான சிஏசி அறிவித்தது. 

இந்நிலையில், துணை பயிற்சியாளர் பணியிடங்களை சீனியர் தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தேர்வு செய்கிறது. இதில் சரண்தீப் சிங், ககன் கோடா, ஜதின் பரன்ஜாபி மற்றும் தேவங் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான நேர்காணல் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பேட்டிங் பயிற்சியாளராக 14 பேரும், பந்துவீச்சு பயிற்சியாளராக 12 பேரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக 9 பேரும் விண்ணப்பத்திருந்தனர். இவர்களில் 3 பதவிகளுக்கும் தலா 3 பேரை தேர்வு செய்து பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

அதில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோர், சஞ்சய் பாங்கர் மற்றும் மார்க் ராம்பிரகாஷ் ஆகியோரும், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பரஸ் மாம்ப்ரே மற்றும் வெங்கடேஷ் பிராசத் ஆகியோரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர், அபய் ஷர்மா மற்றும் டி.திலிப் ஆகியோரும் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிர்வாக இயக்குநர், ஃபிஸியோதெரஃபிஸ்ட், ஸ்ட்ரென்த் அண்ட் கண்டீஷனிங் உள்ளிட்ட இதர பிரிவுகளுக்கான இறுதி பட்டியலும் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ளவர்களிடம் அடுத்தகட்ட நேர்காணல் நடத்தப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கான நபர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory