» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இஷாந்த் வேகத்தில் மே.இ.தீவுகள் திணறல்: 108 ரன்கள் பின்னடைவு

சனி 24, ஆகஸ்ட் 2019 10:25:02 AM (IST)இஷாந்த் வேகத்தில் திணறிய மே.இ.தீவுகள் அணி  தனது முதல் இன்னிங்ஸில்  இந்திய அணியை விட  இன்னும் 108 ரன்கள் பின்தங்கியுள்ளது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தரப்பில் துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே அதிகபட்சமாக 10 பவுண்டரியுடன் 163 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா தனது 11-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பிரம்மாண்ட சிக்ஸர் மூலம் பதிவு செய்தார். 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். ராகுல் 44, ஹனுமா விஹாரி 32 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 96.4 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மே.இ.தீவுகள் தரப்பில் அபாரமாக பந்துவீசி கெமர் ரோச் 4-66, கேப்ரியல் 3-71 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீவுகள் ஆரம்பத்திலேயே  விக்கெட்டுகளை இழந்தது. பிராத்வெயிட் 14, ஜான் கேம்பல் 23, ஷம்ரா புருக்ஸ் 11, பிராவோ 18 ரன்களுடன் வெளியேறினார். 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 48 ரன்களும், ஹெத்மேயர் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5-42 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, ஷமி, ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.  இந்திய அணியை விட மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் இன்னும் 108 ரன்கள் பின்தங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory