» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 கிரிக்கெட்டில் 39 பந்துகளில் சதம், 8 விக்கெட் : கர்நாடக வீரர் சாதனை!!

சனி 24, ஆகஸ்ட் 2019 3:46:19 PM (IST)

39 பந்துகளில் சதம் மற்றும் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கவுதம், புதிய சாதனை படைத்துள்ளார்.

கர்நாடக பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியும் ஷிவ மோகா அணியும் மோதின. பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடுபவர் கிருஷ்ணப்பா கவுதம். பேட்டிங்கில் களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடி 39 பந்தில் சதம் அடித்தார். பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக மட்டுமே 106 ரன்களை சேர்த்த அவர், மொத்தம் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார்.

பின்னர் பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். இது டி 20 தொடரில் சாதனை. இங்கிலாந்து வீரர் காலின் ஆக்கர்மன் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் கிருஷ்ணப்பா கவுதம். டி20 போட்டியில் அவர் எடுத்த ரன்கள் சிறந்தவை. ஆனால், மாநில டி20 லீக்குகளுக்கு அதிகாரப்பூர்வ டி20 அந்தஸ்து இல்லை. எனவே, இது அதிகாரப்பூர்வ பதிவாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த போட்டிக்கு ஐசிசியின் அங்கீகாரம் கிடையாது என்ற போதிலும், சாதனைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சாதனை குறித்து கவுதமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் இவர் அந்த அணிக்கும் ஒரு சில போட்டிகளை தவிர, மற்ற ஆட்டங்களில் அதிரடியாக ஆடியிருக்கிறார். கர்நாடக டி 20 போட்டியில் ஒரு அபார ஆட்டத்தை ஆடி உலகில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். ஒரே போட்டியில் சதம் அடித்தும் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் எந்த ஒரு வீரரும் இப்படியான சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory