» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 8:46:31 PM (IST)தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  
தூத்துக்குடி மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோஷியசன், தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோஷியேசன் ஆகியவை இணைந்து நடத்திய 9 ஆவது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள ஷாரா ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. போட்டியை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம் தொடக்கி வைத்தார்.போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட அலுவலர் பிரின்ஸ் ராஜேந்தரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஷாரா கலை பயிற்சி பள்ளியின் இயக்குநர் ஷநாவாஸ், தொழிலதிபர் செய்யது ஹாரிஸ், வழக்குரைஞர் சுலைமான், தூத்துக்குடி மாவட்ட ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory