» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

திங்கள் 26, ஆகஸ்ட் 2019 4:46:09 PM (IST)ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 179 ரன்களும், இங்கிலாந்து 67 ரன்களும் எடுத்தன. உலக சாம்பியனான இங்கிலாந்து உள்ளூரில் 3 இலக்கத்தை கூட தொட முடியாமல் முடங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஸ்சேன் 80 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (362 ரன்கள்) எட்டியது. இங்கிலாந்து அணியில் பொறுப்பாக ஆடி சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட்  4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

நேற்று பென் ஸ்டோக்ஸ் ஒரு கட்டம் வரை மிகப் பிரமாதமாக ஒரு டெஸ்ட் வீரர் போல் பந்துகளை அதிகவனத்துடன் கையாண்டு சரியான உத்தியில் ஆடுவது, தவிர்ப்பது போன்றவற்றைக் கடைபிடித்தார். ஆனால் 9 விக்கெட்டுகள் போன பிறகு அவர் உடலில் அரக்கன் புகுந்தான். சிக்சர்களாக வெளுத்துக் கட்டினார். ஆஸி.யின் சிறந்த பவுலர் ஜோஷ் ஹேசில்வுட்டை 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று விளாசியது டிம் பெய்னை நிலைகுலையச் செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory