» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பும்ரா அபார பந்துவீச்சு : 2-வது டெஸ்டிலும் வெற்றியை நோக்கி இந்திய அணி!

திங்கள் 2, செப்டம்பர் 2019 12:04:50 PM (IST)2-வது டெஸ்டில் இந்திய அணி 468 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் முதலில் விளையாடிய இந்திய அணி, 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் ஆனது. இந்திய அணித் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்து அசத்தினார். இந்திய கேப்டன் கோலி மீண்டும் பேட்டிங் செய்வதையே விரும்பினார். ஆனால் ஆரம்பத்தில் 57 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. பிறகு ஜோடி சேர்ந்த ரஹானேவும் விஹாரியும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இருவருமே அரை சதமெடுத்தார்கள். 

இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 64, விஹாரி 53 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-வது டெஸ்டை வெல்ல, 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வழக்கம்போல இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள மே.இ. தீவுகள் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இதனால் 3-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. மீதம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் அந்த அணி 423 ரன்கள் எடுக்கவேண்டும். பிராவோ 18, ப்ரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதனால் 2-வது டெஸ்டையும் வென்று தொடரை முழுமையாக வெல்லும் நிலையில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory