» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் : தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ நோட்டீஸ்

சனி 7, செப்டம்பர் 2019 4:07:43 PM (IST)



ஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரையடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த 34 வயதான தினேஷ் கார்த்திக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தின்போது அவர் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்துள்ளார். இது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான அணியாகும். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதால் ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் கிளம்பியுள்ளது.
 
இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உண்மை தான். தினேஷ் கார்த்திக் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory