» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!

சனி 14, செப்டம்பர் 2019 5:34:56 PM (IST)

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

கொழும்பில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 32.4 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஜுரெல் 33 ரன்களும் சுழற்பந்துவீச்சாளர் கரன் லால் 37 ரன்களும் எடுத்தார்கள். வங்கதேச அணியின் செளதுரி, ஷமிம் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதையடுத்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்தவீச்சில் தினறியது. 

வங்கதேச அணி அணி 51 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் இலக்கை விரட்ட மிகவும் முயன்றார்கள். கடைசியில் வங்கதேச அணியால் 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தன்ஷிமும் ரகிபுலும் ஓரளவு ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகில் சென்றார்கள். எனினும் 33-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார் அதர்வா அன்கோல்கர். ஆட்ட நாயகனும் விருதும் அவருக்கே சென்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory