» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டி தொடக்கம்

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:33:00 AM (IST)கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2  நாள்கள் நடைபெறும் வித்யா பாரதி அகில பாரத ஹாக்கி போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்த 23 அணிகள் பங்கேற்கின்றன. மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக 14,  17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 

மாணவர்களுக்கான போட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்திலும், மாணவிகளுக்கான லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்திலும் சனிக்கிழமை தொடங்கியது. மாணவர்களுக்கான போட்டியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார். இப்போட்டிகள், காலிறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், பின்னர் நாக்-அவுட் முறையிலும் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி இன்று (செப்.22) நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory