» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு

வியாழன் 26, செப்டம்பர் 2019 5:10:44 PM (IST)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது இதற்கு முன்னதாக செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று நடைபெற்ற டிஎன்சிஏ ஆண்டு நிர்வாகக் கூட்டத்தில் போட்டியின்றித் ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்களில் தமிழ்நாடு முதல் பெண் தலைவரைத் தேர்வு செயதுள்ளது.டிஎன்சிஏ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டார். கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக குருநாத் மெய்யப்பனுக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory