» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாக். வீரர்!!

செவ்வாய் 1, அக்டோபர் 2019 4:06:28 PM (IST)இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின் பாகிஸ்தானில் சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது. 306 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து 67 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் ஆசம் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 105 பந்துகளைச் சந்தித்த பாபர் ஆசம் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்ளிட்ட115 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்கு எதிராக பாபர் ஆசம் அடிக்கும் 3-வது சதமாகும். சர்வதேச அரங்கில் 11-வது சதமாகவும் அமைந்தது. பாபர் ஆசம் 11-வது சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி, தனது 11-வது சதத்தை அடிக்க 82 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால், பாபர் ஆசம் 71 இன்னிங்ஸ்களில் தனது 11-வது சதத்தைப் பதிவு செய்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆனால், இவர்கள் இருவரைக் காட்டிலும் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா 11 சதங்களை 64 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் 65 இன்னிங்ஸ்களில் 11 சதங்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த காலண்டர் ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் எனும் பெருமையை பாபர் ஆசம் பெற்றார். மேலும், முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத்தின் சாதனையையும் பாபர் ஆசம் முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கடந்த 1987-ம் ஆண்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 21 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். ஆனால், பாபர் ஆசம், இந்த காலண்டர் ஆண்டில் 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் 23 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்து 3-வது இடத்தில் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory