» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிஷப் பந்த் நீக்கம்: விக்கெட் கீப்பராக சாஹா அறிவிப்பு

செவ்வாய் 1, அக்டோபர் 2019 5:31:27 PM (IST)

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பராக சாஹா செயல்படுவார் என கேப்டன் கோலி அறிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள முதல் டெஸ்டில் ரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என விராட் கோலி அறிவித்துள்ளார் . 

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பராக சாஹா செயல்படுவார். அவர் நல்ல உடற்தகுதியை அடைந்துவிட்டார். அவருடைய கீப்பிங் திறமைகளை அனைவரும் அறிவர். வாய்ப்புகள் கிடைத்தபோது தனது பேட்டிங் திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாகக் காயம் காரணமாக அவர் வெளியில் இருந்தார். என்னைப் பொறுத்தவரை அவர் தான் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். இந்திய ஆடுகளச் சூழலில் அவர் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார் என்று கோலி கூறியுள்ளார்.

சாஹா, கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 2018-ல் விளையாடினார். காயம் காரணமாக அவர் இதர தொடர்களிலிருந்து விலகினார். இதற்குப் பிறகு விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட ரிஷப் பந்த், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் சதங்கள் எடுத்தார். எனினும் இந்திய ஆடுகளங்களில் சாஹா பொருத்தமான விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory