» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா அணியில் அறிமுகமான தமிழர்!

புதன் 2, அக்டோபர் 2019 5:45:56 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த செனுரான் முத்துசாமி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். 

செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான். தமிழரான அவர் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு எதிராக, இந்திய மண்ணில் அறிமுகம் ஆவதும் குறிப்பிடத்தக்கது. 25 வயது ஆகும் செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தென்னாப்பிரிக்க நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் இடம் பிடித்து ஆடி வந்தார்.

இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளரான செனுரான் முத்துசாமி ஆல் - ரவுண்டராக வலம் வருகிறார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ளார். செனுரான் முத்துசாமியின் முதல் தர பேட்டிங் சராசரி 32.72 ஆகும். லிஸ்ட் ஏ போட்டிகளில் 26.60 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 69 முதல் தர போட்டிகளில் 129 விக்கெட்களும், 52 லிஸ்ட் ஏ போட்டிகளில் 48 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார்.

டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே ஒரு ஓவர் தான் பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் கலக்கினார் அவர்.  தனக்கு கிடைத்த ஒரே ஓவரில் விக்கெட் வீழ்த்தி தன் திறனை நிரூபித்துக் காட்டினார் செனுரான் முத்துசாமி. அதனால், தென்னாப்பிரிக்கா அணியில் வாய்ப்பு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்றார் முத்துசாமி. தென்னாப்பிரிக்க அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்க முடிவு செய்ததை அடுத்து அவருக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory