» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி இரட்டை சதம் : இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர்

வெள்ளி 11, அக்டோபர் 2019 5:27:46 PM (IST)தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில்,  இந்திய அணி முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்து இருந்தது.

தனது 23-வது அரைசதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் (105 பந்து, 10 பவுண்டரி), ரஹானே 18 ரன்களுடனும் (70 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த நிலையில்,  2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரகானே  59 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  விராட் கோலிக்கு ஜடேஜா பக்க பலமாக விளையாடினார்.  அபாரமாக ஆடிய விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 7-வது இரட்டை சதம் இதுவாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்தார் விராட் கோலி. சேவாக், சச்சின் ஆகியோர் விராட் கோலியை விட விரைவாக 7000 ரன்களை வந்தடைந்துள்ளனர். வால்டர் ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களிலும் சேவாக் 134 இன்னிங்ஸ்களிலும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி 138 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளனர்.

ஜடேஜா 93 ரன்களில் ஆட்டமிழந்ததும் இந்தியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி 156.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை துவங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 36ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய தரப்பில் உமேஷ் 2 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory