» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் : தென் ஆப்பிரிக்காவின் தோல்யால் டுபிளெசி விரக்தி

திங்கள் 14, அக்டோபர் 2019 12:18:48 PM (IST)



"இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்" என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டுபிளெசி கூறினார், 

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தோல்வி குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் கூறியதாவது: துணைக்கண்டங்களில் முதல் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது, முதல் இன்னிங்சில் நாம் எடுக்கும் ரன்கள்தான் நமக்கு வாய்ப்பைத் தரும். ஆனால் இந்திய அணி பேட் செய்த விதம் பிரமாதம், குறிப்பாக விராட் கோலி அசாத்தியமாக ஆடினார், இதற்கு மனரீதியாக நிறையக் கடினத்தன்மை தேவை. 2 நாட்கள் களத்தில் பீல்ட் செய்து விட்டு உடனே இறங்கி ஆடுவது கடினம்.

அது நம்மைக் களைப்படையச் செய்து விடும். குறிபாக 2ம் நாள் மாலை மனத்தளவில் பேட்ஸ்மென்கள் பலவீனமாக இருந்தார்கள். பிறகு என்ன விட்டதைப் பிடிக்கும் வேலைதான், இந்த டெஸ்ட் போட்டியில் எங்கள் ஆட்டம் போதாது. விராட் கோலியைப் பொறுத்தவரை களவியூகத்தில், பந்து வீச்சு மாற்றங்களில் என்று நாங்கள் அவருக்கு சவால்களை எழுப்பினோம் ஆனால் அவற்றுக்கெல்லாம் கோலியிடம் விடை இருந்தது. கோலி மிக மிகப் பிரமாதம், அவரது வேட்கை தனித்துவமானது. அவர் 100, 150, எதிலும் திருப்தியடையவதில்லை.

தொடக்கத்தில் பிலாண்டர், ரபாடா கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர், நாத்தியேவை உடனடியாக அறிமுக டெஸ்ட் போட்டியில் கடினமான சூழ்நிலையில் நாம் பெரிதாக எதிர்பார்ப்பது தவறாகும். இந்திய அணி ஜோடியாக நன்றாக வீசினர். மொத்தத்தில் வெற்றி பெறத் தகுதியான அணி இந்திய அணியே.இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம், சாதனைகளே இதனை எடுத்துக் காட்டும் என ஃபாப் டுபிளெசி கூறினார், 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory