» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தமிழனாய் வாழ்வது பெருமை: விமர்சனத்துக்குப் மிதாலி ராஜ் பதிலடி

புதன் 16, அக்டோபர் 2019 12:06:17 PM (IST)

"தமிழனாய் வாழ்வது எனது பெருமை" என்று தன்னை விமர்சித்த நெட்டிசனுக்குப் மிதாலி ராஜ்,  பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் இதில் ஆடியதன் மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் சச்சின் டெண்டுல்கரின் பதிவைக் குறிப்பிட்டு மிதாலி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். இதில் நெட்டிசன் ஒருவர் மிதாலியின் பதிவில் ”இவருக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் மட்டும் பேசுவார்” என்று விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு மிதாலி, தமிழ் என் தாய்மொழி.. நான் நன்றாகத் தமிழ் பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் எனது அனைத்துப் பதிவுகளிலும் என்னைக் குறை கூறுகிறீர்கள்” என்று பதில் அளித்தார். மேலும். பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டட்டின் You Need To Calm Down பாடலை அந்த நெட்டிசனுக்கு மிதாலி அர்ப்பணித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory