» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூப்பர் ஓவர் முறையில் மாற்றம்: டெண்டுல்கர் வரவேற்பு

புதன் 16, அக்டோபர் 2019 3:49:24 PM (IST)

முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் முறை என்று ஐசிசியின் விதிகளை மாற்றியதற்கு டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இனிமேல் சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. அதாவது ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். 

அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஐசிசியின் இந்த புதிய விதிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தெண்டுல்கர் தனது டுவிட்டரில், முடிவுகள் எட்டப்படாத போது, இதுதான் நியாயமான வழி என்பதை நான் உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி விதிகளை மாற்றியது ஏன்?

இங்கிலாந்தில் கடந்த மே மற்றும் ஜூலை மாதம் நடந்த 50 -ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் சேர்த்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.  சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனை அடுத்து இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு கடும் விமர்சனம் கிளம்பியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இனிமேல் சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு  செய்யப்படமாட்டாது. அதாவது ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory