» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாகிஸ்தான் அணியிலிருந்து கேப்டன் சர்ஃபராஸ் நீக்கம்

வெள்ளி 18, அக்டோபர் 2019 4:28:31 PM (IST)

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து பாகிஸ்தானின் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அஸார் அலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்கும் கேப்டனாக நீடிப்பார். பாபர் அஸாம், டி20 உலகக் கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார். ஒருநாள் அணிக்கான கேப்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. 

நவம்பர் - டிசம்பரில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. மேலும், பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவமில்லா இலங்கை அணி, நெ.1 டி20 அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து அந்த அணியில் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

13 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்த சர்ஃபராஸ் அகமது, 4 வெற்றிகள், 8 தோல்விகளை அடைந்துள்ளார். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று, நெ.1 டி20 அணியாகவும் திகழ்ந்துள்ளது. 2020 ஜூலையில் தான் பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. அப்போது பாகிஸ்தான் அணியின் புதிய ஒருநாள் அணி கேப்டன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். 

மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்தது. பிறகு, மூத்த வீரர்களான சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகிய இரு வீரர்களுக்கும் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இரு வீரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory