» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்: 4 நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன

புதன் 20, நவம்பர் 2019 5:42:55 PM (IST)

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் ரெட் பந்திற்குப் பதிலாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. முதன்முதலாக இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடுகிறது. வங்காளதேசம் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அந்தஸ்து பெற்றபோது, முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்துதான் விளையாடியது. தற்போது முதல் பிங்க் பால் போட்டியிலும் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. 

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் விரும்புகின்றன. போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். போட்டியின்  இடைவேளையின்போது முன்னாள் ஜாம்பவான்கள் ரசிகர்களின் முன் தோன்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்தன என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory