» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இன்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வெள்ளி 22, நவம்பர் 2019 10:31:06 AM (IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டது. வங்காளதேச 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஷிகர் தவானுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த புவனேஷ்வர்குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் அணிக்கு திரும்புகிறார்கள். கலீல் அகமது, ஷர்துல் தாகூர், குருணல் பாண்ட்யா கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்திய ஒரு நாள் போட்டி அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.

இந்திய 20 ஓவர் போட்டி அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory