» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்!

வெள்ளி 22, நவம்பர் 2019 4:54:17 PM (IST)



வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 73 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

ஷமியின் பவுன்சரில் காயமடைந்த லிட்டோன் தாஸ் உணவு இடைவேளைக்குப் பிறகு பேட்டிங் செய்யவில்லை. இதையடுத்து, எபாதத் ஹோசைனை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். லிட்டோன் தாஸுக்குப் பதிலாக மாற்று வீரராக மெஹதி ஹாசன் களமிறங்கினார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் பந்தில் புஜாராவிடம் கேட்ச் ஆனார். இதுவரை திணறல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி 19 ரன்கள் எடுத்த நயீம் ஹாசனை, மீண்டும் இஷாந்த் சர்மாவே போல்டாக்க பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதையடுத்து, கடைசி விக்கெட்டாக அபு ஜாயெத்தை ஷமி வீழ்த்தினார். இதன்மூலம், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி சார்பில் ஷத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory