» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய வெயின் பிராவோ!!

வெள்ளி 13, டிசம்பர் 2019 5:23:24 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுள் ஒருவராக கருதப்படும் வெயின் பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. தனது துல்லியமான பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்விகளை சந்தித்ததால், சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் விதிமுறையை மாற்றி அமைத்தது. இதனால் கிறிஸ் கெய்ல், பொல்லார்டு போன்றோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் டி20 அணிக்கு மீண்டும் திரும்புகிறேன் என்று பிராவோ அறிவித்துள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டை தவிர மற்ற வகை கிரிக்கெட்டிற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிராவோ கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிற்கு திரும்புவதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் தேர்வு செய்யப்பட்டால், டி20 கிரிக்கெட்டிற்காக முழுவீச்சில் களம் இறங்குவேன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட், ரசிகர்கள் மற்றும் இளைஞர்களுடன் விளையாடுவது உற்சாகமாக இருக்கும்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory