» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புவனேஷ் குமார் விலகல்!!

சனி 14, டிசம்பர் 2019 12:49:21 PM (IST)

காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை சென்னையில் தொடங்க உள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் நாளை தொடங்கவுள்ள ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து புவனேஷ் குமார் விலகியுள்ளார். இவருக்கு பதில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory