» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

திங்கள் 6, ஜனவரி 2020 4:55:16 PM (IST)நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பெர்த் மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முறையே 296 ரன்கள் மற்றும்  247 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஆஸ்திரேலியா வென்றது. தொடரை வென்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 454 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்து அணி 136 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 279 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் ஒயிட் வாஷ் செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory