» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தோனி விரைவில் ஓய்வு : ரவி சாஸ்திரி தகவல்

வெள்ளி 10, ஜனவரி 2020 5:23:17 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது..

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, "விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறுவார்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ரவிசாஸ்திரி கூறும்போது, "நானும் தோனியும் கலந்தாலோசித்தோம், இது எங்களுக்கு இடையிலானது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்து விட்டார், விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பார். எப்படிப் பார்த்தாலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து விடுவார்.

இந்த வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். அப்படியென்றால் அவர் விரைவில் ஆடத்தொடங்க வேண்டும். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடி உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அவதானிப்பார். எனவே டி20 கிரிக்கெட்தான் இனி அவருக்கு மீதமிருக்கிறது, நிச்சயம் ஐபிஎல் ஆடுவார். எனக்குத் தெரிந்த வரையில் தோனி இந்திய அணியில் தன்னை வலுக்கட்டாயமாக நுழைத்துக் கொள்ள விரும்புபவர் அல்ல, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் அவருக்குப் பிரமாதமாக அமைந்து விடும்பட்சத்தில் பார்ப்போம்...” என்றார் ரவிசாஸ்திரி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory