» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஒருநாள் போட்டியில் பிரித்வி ஷா அறிமுகம்

புதன் 22, ஜனவரி 2020 10:42:34 AM (IST)

நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டி-20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து, நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி வரும் 24-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. 2-வது போட்டி 26-ம்தேதி ஆக்லாந்து நகரிலேயே நடக்கிறது.

29-ம் தேதி 3-வது போட்டி ஹேமில்டன் நகரிலும்,31-ம் தேதி 4-ம் போட்டி வெலிங்டனிலும், 5-வது மற்றும் கடைசிப் போட்டி டவுரங்கா நகரிலும் நடக்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துக்கு நேற்று இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்டு, இன்று ஆக்லாந்து சென்றடைந்தனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவண் காயம் காரணமாக இந்திய அணியுடன் செல்லவில்லை. 

இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் இளம் வீரர் பிரித்வி ஷா, இடம் பெற்றுள்ளார். முதல்முறையாக ஒருநாள் அணிக்கு பிரித்வி ஷா அழைக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், என்சிஏவில் தொடர்ந்து பயிற்சியில் இருப்பதால் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. அதேபோல வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருநாள் தொடருக்கான அணியில் கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர். காயமைடந்த ஷிகர் தவணுக்கு பதிலாக டி20 தொடரில் சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி :

விராட்கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ்அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர், கேதார் ஜாதவ்.

டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயோஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா,ஷர்துல் தாக்கூர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory