» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

சனி 25, ஜனவரி 2020 3:44:03 PM (IST)ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் புளோம்பாண்டீனில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, நியூசிலாந்துடன் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டியது. அப்போது ஜெய்ஸ்வால் 57 ரன்னுடனும், திவ்யான்ஷ் சக்சேனா 52 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால் மேற்கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்யவில்லை. அதன் பிறகு டக்வொர்த்- லீவிஸ் விதிமுறைப்படி 23 ஓவர்களில் நியூசிலாந்து அணி 192 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய நியூசிலாந்து 21 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிபிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அதர்வா அங்கோல்கர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

ஏற்கனவே இலங்கை, ஜப்பானை வீழ்த்தியிருந்த இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாக (ஹாட்ரிக்) பதிவானது. தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.தோல்வி அடைந்தாலும் நியூசிலாந்து அணி (3 புள்ளி) கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் இலங்கை-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் குட்டி அணியான ஜப்பான் மெகா வெற்றியை பெற்றால் மட்டுமே நியூசிலாந்தின் வாய்ப்பு பறிபோகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory