» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் வெற்றிநடைக்கு இதுவே காரணம்: விராட் கோலிக்கு இன்சமாம் உல் ஹக் பாராட்டு!!!

வெள்ளி 31, ஜனவரி 2020 12:19:07 PM (IST)

இந்திய அணி தொடர்ச்சியாக பெற்று வரும் வெற்றிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. அதன் பிறகு எந்த ஒரு தொடரிலும் தோல்வி அடையாமல் சாதனைகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது வெளிநாட்டுத் தொடர்களிலும் சிறப்பாகக் கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிகளைப் பாராட்டி அதற்குக் காரணமானவற்றை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பட்டியலிட்டுள்ளார். 

அவரது கருத்தின் படி ‘இந்தியா மிக சிறப்பான இரு பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரைப் பெற்றுள்ளது. ஆனால் அது மட்டுமில்லாமல் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் கண்டெடுத்துள்ளது. அதேப்போல இந்தியாவின் பவுலிங்கைப் பார்த்து எதிரணி பேட்ஸ்மேன்கள் அஞ்சுகின்றனர். இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது விராட் கோலியின் உடல்மொழி. ஆக்ரோஷமாக விளையாடும் அவர் மற்ற வீரர்களுக்கு உந்துதலாக இருக்கிறார்.’ எனக் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory