» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இம்ரான் கான் போல செயல்படுகிறார்: விராட் கோலிக்கு மஞ்ச்ரேக்கர் பாராட்டு

திங்கள் 3, பிப்ரவரி 2020 4:37:37 PM (IST)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இம்ரான் கான் வழிநடத்தியது போல விராட் கோலி செயல்படுகிறார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ட்விட்டரில் கூறியதாவது:விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை நினைவுபடுத்துகிறது. 

வலுவான தன்னம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. தோற்கும் நிலைமையிலிருந்தபோது வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. தன்னம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று இந்திய அணியைப் பாராட்டியுள்ளார். இந்தத் தொடரின் மூலம் பேட்ஸ்மேன் - கீப்பராக அருமையாகச் செயல்பட்ட கே.எல். ராகுலின் திறமையை இந்திய அணி கண்டுபிடித்துள்ளது. அபாரமாக அவர் விளையாடினார் என்றும் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory