» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா அச்சுறுத்தல் : ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு

வெள்ளி 13, மார்ச் 2020 4:41:47 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

வரும் 29 ஆம் தேதி தொடங்கி  மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தன. இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்தது.  கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.  இந்த நிலையில், ஐபிஎல்-இன் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று கூடியது.  

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இந்தியாவில்  கரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பு காரணமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல் .2020 போட்டி  ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ கூறி உள்ளது. நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory