» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு

வெள்ளி 13, மார்ச் 2020 5:06:38 PM (IST)இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணியை உடனடியாக நாடு திரும்புமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா வைரஸின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இதனால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தள்ளி வைக்கப்படுகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக சொந்த நாடு திரும்ப வீரர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. ஆகவே, இன்றைய ஆட்டத்தை உடினடியாக ரத்து செய்துவிட்டு சொந்த நாடு திரும்ப இருக்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory