» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா அச்சுறுத்தல்: கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை!

சனி 14, மார்ச் 2020 3:36:18 PM (IST)

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதையடுத்து ஐபிஎல் போட்டியும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீரா்கள், ரசிகா்கள் ஆகியோரின் நலன் கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விசாக்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-க்குப் பிறகு தொடங்காமல் போனால் கிரிக்கெட் வீரர்களின் விடுமுறைக் காலம் மேலும் அதிகமாகும் எனத் தெரிகிறது. இதனால் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அடுத்த ஒரு மாதத்துக்கு உள்ளூர், சர்வதேச ஆட்டங்கள் எதுவும் நடைபெறாது. கிரிக்கெட் ஆட்டங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் கண்டுகளிக்க கிரிக்கெட் ரசிகர்கள் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்கவேண்டிய நிலைமை தற்போது உள்ளது. 

கரோனா அச்சுறுத்தலால் பாதிப்பு ஆளாகியுள்ள கிரிக்கெட் தொடர்கள்:

1. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 வரை ஒத்திவைப்பு

2. இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

3. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

4. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு

5. உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

6. ரசிகர்கள் இல்லாமல் பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 போட்டி நடத்தப்படும். மார்ச் 18-ல் முடிவடையும். போட்டியிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி.

7. ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு. 

8. வங்கதேசத்தில் நடைபெற இருந்த ஆசியா லெவன், உலக லெவன் அணிகள் மோதும் டி20 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து

அப்படியாMar 23, 2020 - 11:58:56 AM | Posted IP 162.1*****

இவர்கள் பெரிய மருத்துவர்கள் நாட்டுக்காக பந்து போட்டு உழைக்கிறார்களாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory