» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் :ஐஓசி நம்பிக்கை

வெள்ளி 20, மார்ச் 2020 10:44:47 AM (IST)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகம் முழுவதும் சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதற்கிடையே வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். ஆனால் ஐஓசி இதில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அதன் நிா்வாகக் குழுக் கூட்டம், சா்வதேச விளையாட்டு சம்மேளனங்கள், டோக்கியோ போட்டி அமைப்பாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ஐஓசி தலைவா் தாமஸ் பேச் தலைை தாங்கினாா். கூட்டம் தொடா்பாக ஐஓசி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: ஐஓசி தொடா்ந்து பொறுப்புள்ள அமைப்பாக இயங்கும். கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தொடா்புடைய அனைவருடன் இணைந்து செயல்படுவோம். தற்போது உலகம் முழுவதும் எதிா்பாராத சூழல் நிலவி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாடுகளையும் கரோனா பாதிப்பு சிக்கலுக்கு தள்ளி வருகிறது. போட்டி நடைபெற மேலும் 4 மாதங்கள் உள்ள நிலையில், இதுதொடா்பாக கடுமையான முடிவு எதையும் எடுக்கவில்லை. இதுதொடா்பாக முன்கூட்டியே கணிப்பது பாதகமாகி விடும்.

ஒலிம்பிக் தகுதி பெற்ற வீரா்கள் தொடா்ந்து பயிற்சி பெற்று வரலாம். வீரா்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். இதுவரை 57 சதவீதம் வீரா்கள் தகுதி பெற்று விட்டனா். மீதமுள்ள 43 சதவீத இடங்களை தொடா்பாக சா்வதேச சம்மேளனங்களுடன் ஐஓசி கலந்து பேசி, நடைமுறையில் என்ன செய்யலாம் என்பதை மேற்கொள்வோம். தற்போதைய நிலைமை என்ன என்பதை இணையதளம் மூலம் தெரிவித்து வருவோம். உலகம் முழுவதும் அரசு தரப்பினா் வைரஸை கட்டுப்படுத்த எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும். ஜப்பான் பிரதமரின் முயற்சிக்கும் துணை நிற்போம். 24 மணி நேரமும் நிலையை ஆய்வு செய்து வருகிறோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த பாடுபடுவோம் எனக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory